உத்தரப் பிரதேச மாநிலம் பாக்பத்தில் யமுனை நதியில் சென்றுக் கொண்டிருந்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் பாக்பத்தில் யமுனை நதியில் சென்று கொண்டிருந்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 60 பேர் சென்ற அந்த சிறிய படகு பாரம் தாங்காமல் கவிழந்ததாக கூறப்படுகிறது. படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இதுவரை 12 பேர் மீட்கப்பட்டுள்ளனர். விபத்து நடந்தப் பகுதியில் காவல்துறையினரும், மீட்புப் படையினரும் தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.