இந்தியா

பிபிசி-யின் புதிய சேவைகள் இன்று தொடக்கம்

பிபிசி-யின் புதிய சேவைகள் இன்று தொடக்கம்

webteam

குஜராத்தி, தெலுங்கு, மராத்தி மற்றும் பஞ்சாபி ஆகிய நான்கு இந்திய மொழிகளில் செய்தி சேவைகளை, பிபிசி நிறுவனம் இன்று தொடங்குகிறது. 

ஏற்கெனவே, தமிழ், இந்தி, பெங்காலி மற்றும் உருது மொழிகளிலும், ஆங்கிலத்திலும் பிபிசி செய்திச் சேவையை வழங்கி வருகிறது.இந்நிலையில் நான்கு புதிய இந்திய மொழிகளுடன், 7 ஆப்ரிக்க மற்றும் கொரிய மொழிகளில் சேவைகளை இன்று தொடங்குகிறது. மேலும், பிபிசி இந்தி தொலைக்காட்சி செய்தி, பிபிசி துனியா என்ற பெயரில் மறு துவக்கம் செய்யப்படுகிறது. `இந்தியா நியூஸ்' தொலைக்காட்சியில் தினசரி இரவு செய்திகள் ஒளிபரப்பாகும்.புதிய சேவைகள், இணையத்திலும், சமூக வலைத்தளங்களிலும் இடம் பெறும். தெலுங்கு தொலைக்காட்சி செய்தி, `பிபிசி பிரபஞ்சம்' என்ற பெயரில் இன்று இரவு முதல் தொடங்குகிறது. இந்த செய்திகள், ஈநாடு டிவி ஆந்திர பிரதேத்திலும் ஈநாடு டிவி தெலங்கானாவிலும் ஒளிபரப்பாகும்.

இது இந்தியாவில் பிபிசியின் குறிப்பிடத்தக்க முதலீடுகளில் ஒரு பகுதியாகும். 2 புதிய தொலைக்காட்சி அரங்குகளுடன் டெல்லியில் விரிவாக்கப்பட்ட செய்தி சேவைப் பிரிவு இதில் உள்ளடங்கும்.பிபிசியின் தலைமை இயக்குநர் பெர்கென்ஹெட்டின் லார்ட் ஹால், இந்த புதிய சேவைகளை துவக்கி வைக்க இந்தியா வந்துள்ளார்.