லடாக்கின் தனித்துவமான கலாச்சாரம் மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க இன்று சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார். ஆனால், இந்த உரிமைப் போராட்டத்திற்குப் பின்னால் அவரது குடும்பத்தின் 40 ஆண்டுகால நீண்ட வரலாற்றுப் பின்னணி உள்ளது. கடந்த 1984 ஆம் ஆண்டு, சோனம் வாங்சுக்கின் தந்தையும் அன்றைய காங்கிரஸ் தலைவருமான சோனம் வாங்யால், லடாக் மக்களுக்கு பழங்குடியினர் அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி லே பகுதியில் வரலாற்றுச் சிறப்புமிக்க தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டார்.
சுமார் 5 நாட்கள் நீடித்த இந்தத் தீவிரமான உண்ணாவிரதப் போராட்டத்தின் காரணமாக, ஒட்டுமொத்த தேசத்தின் கவனமும் லடாக்கின் பக்கம் திரும்பியது. இதன் விளைவாக, அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி நேரடியாக லே பகுதிக்கு விமானம் மூலம் சென்று, சோனம் வாங்யாலைச் சந்தித்துப் பேசினார். லடாக் மக்களின் நியாயமான கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்த பிரதமர் இந்திரா காந்தி, சோனம் வாங்யாலுக்கு குளிர்பானம் வழங்கி அவரது உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்து வைத்தார். இந்த வரலாற்றுப் போராட்டத்தின் தொடர்ச்சியாக, கடந்த 1989 ஆம் ஆண்டு லடாக் சமூகத்தினருக்கு அதிகாரப்பூர்வமாக 'பட்டியலிடப்பட்ட பழங்குடியினர்' அந்தஸ்து வழங்கப்பட்டது.
அன்று லடாக் மக்களின் அடையாளத்திற்காகவும் பழங்குடியின அந்தஸ்துக்காகவும் அவரது தந்தை சோனம் வாங்யால் போராடினார். இன்று அதே வழியில் நீட் தேர்வு குளறுபடிக்கு பொறுப்பேற்று ‘மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்’ என்ற ஒற்றைக் கோரிக்கையோடு உண்ணாவிரதம் இருந்து வருகிறார் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக். அவருடைய உண்ணாவிரதப் போராட்டம் இன்று 21-வது நாளை எட்டியுள்ளது அவரது மகன் சோனம் வாங்சுக் டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர்ந்து போராடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.