நாகலாந்தில் ராணுவ வீரர்களுக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். ஒரு ராணுவ வீரர் வீரமரணமடைந்தார்.
நாகலாந்து மாநிலத்தில் பயங்கரவாதிகளுக்கும் ராணுவத்தினருக்குமிடையே இன்று காலை துப்பாக்கி சண்டை ஏற்பட்டது. இந்த தாக்குதலில், 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். மேலும், ராணுவர் வீரர் ஒருவரும், பொதுமக்களில் ஒருவரும் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காயமடைந்த 3 ராணுவ வீரர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருவதால், அங்கு பெரும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.