இந்தியா

ஜம்மு - காஷ்மீர்: பயங்கரவாதிகள் தாக்குதல் - 4 பேர் உயிரிழப்பு

ஜம்மு - காஷ்மீர்: பயங்கரவாதிகள் தாக்குதல் - 4 பேர் உயிரிழப்பு

jagadeesh

ஜம்மு - காஷ்மீரின் சோபூர் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் இருவர் மற்றும் பாதுகாப்பு வீரர்கள் இருவர் உயிரிழந்தனர்.

சோபூர் பகுதியில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியிருப்பதாக பாதுகாப்புப்படையினர் தகவல் கிடைத்தது. இதனையடுத்து பாதுதாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர். அப்போது பொது மக்கள் இருவரும், பாதுகாப்பு படையில் இருவரும் தாக்குதலில் உயிரிழந்தனர்.

இந்த பயங்கரவாத தாக்குதலில் படுகாயமடைந்த வீரர்கள் 3 பேருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.