இந்தியா

பத்தாம் வகுப்பு, பிளஸ் டூ மறுதேர்வு... சிபிஎஸ்இ அட்டவணை வெளியீடு

webteam

நாடு முழுவதும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பிளஸ் டூ, பத்தாம் வகுப்பு மறுதேர்வுக்கான அட்டவணை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதாவது சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களும், அதிக மதிப்பெண்கள் பெற விரும்பும் மாணவர்களும் செப்டம்பரில் நடத்தப்படும் மறுதேர்வுகளை எழுதுவார்கள்.

மறுதேர்விலும், முன்னேற்றத் தேர்விலும் எடுக்கும் மதிப்பெண்கள் இறுதியாக எடுத்துக் கொள்ளப்படும் என சிபிஎஸ்இ தேர்வுக் கட்டுப்பாட்டுத் துறை தெரிவித்தது. தற்போது மறு தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, பிளஸ் டூ வகுப்புக்கு செப்டம்பர் 22-ம் தேதி முதல் 30-ம் தேதி வரையிலும், பத்தாம் வகுப்புக்கு செப்டம்பர் 28ம் தேதி வரையிலும் தேர்வுகள் நடைபெறவுள்ளன. மறுதேர்வில், பத்தாம் வகுப்பில் 1.5 லட்சம் மாணவர்களும், பிளஸ் டூ வகுப்பில் 87 ஆயிரம் மாணவர்களும் பங்கேற்கவுள்ளனர்.

இணையதள முகவரி: https://cbse.nic.in