இந்தியா

கேரள விமான விபத்து - சச்சின், ரகானே இரங்கல்

கேரள விமான விபத்து - சச்சின், ரகானே இரங்கல்

webteam

கேரள விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு கிரிக்கெட் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

துபாயிலிருந்து கேரளா வந்த விமானம் தரையிறங்கும்போது விபத்திற்குள்ளானது. இதில் 191 பேர் பயணம் செய்ததாக தெரிகிறது. அதில் 174 பயணிகள், 10 குழந்தைகள், 5 பணிப்பெண்கள், 2 விமானிகள் அடங்கும். விமானத்தின் முன்சக்கரத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக விபத்து நேரிட்டது எனவும் ஒரு விமானி உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும் முதற்கட்டமாக தகவல் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது டிவிட்டர் பக்கத்தில், “விபத்திற்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் உள்ள அனைவருக்காகவும் பிரார்த்திக்கிறேன். இந்த துயர விபத்தில் நெருங்கியவர்களை இழந்த குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கிரிக்கெட் வீரர் ரகானே தனது டிவிட்டர் பக்கத்தில், “கோழிக்கோட்டில் விமான விபத்து என்பது உண்மையில் சோகமான செய்தி. ஏர் இந்தியா விமானத்தில் பயணிகள் மற்றும் ஊழியர்களுக்காக பிரார்த்தனை செய்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.