இந்தியா

கேம்ப்ரிட்ஜ் அனாலிட்டிகா நிறுவனத்திற்கு மத்திய அரசு எச்சரிக்கை

கேம்ப்ரிட்ஜ் அனாலிட்டிகா நிறுவனத்திற்கு மத்திய அரசு எச்சரிக்கை

rajakannan

ஃபேஸ்புக் பயனர்களின் தகவல்களை திருடிய புகாருக்கு ஆளாகியுள்ள கேம்பிரிட்ஜ் அனலிடிகா நிறுவனத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்தியாவில் உள்ள ஃபேஸ்புக் பயனர்களிடமிருந்து தகவல்களை பயன்படுத்தினீர்களா, யாருக்காக தகவல்களை பெற்றீர்கள் என விளக்கம் அளிக்குமாறு நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது. தகவல் திருட்டு விவகாரத்தில் குறிப்பிட்ட 6 கேள்விகளுக்கு கேம்பிரிட்ஜ் அனலிடிகா பதில் தர வேண்டும் என்றும் அதில் கேட்டுக் கொண்டுள்ளது.  

மத்திய அரசு எழுப்பிய கேள்விகள் பின்வருமாறு:-

  • இந்தியர்களின் தகவல்களை கொண்டு யாருக்காவது வேலை செய்து தந்தீர்களா? 
  • அப்படியெனில் எந்த நிறுவனத்திற்கு வேலை செய்து தந்தீர்கள்?
  • அத்தகைய தகவலை அவர்கள் எப்படி அடைந்தார்கள்? 
  • இதற்காக பயனர்களிடம் இருந்து ஒப்புதல் பெறப்பட்டதா?
  • பயனர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்கள் எப்படி பயன்படுத்தப்பட்டன?
  • பயனர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் தொகுப்பு ஏதும் தயாரிக்கப்பட்டதா? என கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன

இந்த விபரங்களை மார்ச் 31-க்குள் அளிக்குமாறு அந்நிறுவனத்துக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதோடு, விபரங்களை அளிக்க தவறினால் சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.