இந்தியா

பிறந்த நாளன்று தெலங்கானா இன்ஜினியர் அமெரிக்காவில் பலி

பிறந்த நாளன்று தெலங்கானா இன்ஜினியர் அமெரிக்காவில் பலி

Rasus

தெலங்கானாவை சேர்ந்த இன்ஜினியர், தனது பிறந்த நாளன்று அமெரிக்காவில் பரிதாபமாக உயிரிழந்தார்.

தெலங்கானாவை சேர்ந்தவர் பாத்னாக் பிரதீப். அமெரிக்காவில் கடந்த 8 வருடங்களாக இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கார்த்திகா. சம்பவ நாளான்று பிரதீப் தனது 29-ஆவது பிறந்த நாளை கொண்டாடியிருக்கிறார். இதனையொட்டி அவரது மனையியுடன் காரில் வெளியில் சென்ற பிரதீப் வீடு திரும்பிக் கொண்டிருக்கும் போது எதிர்பாரதவிதமாக கார் பள்ளத்தில் சரிந்தது. இதில் பிரதீர் பரிதமாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது மனைவி கார்த்திகா உள்பட 4 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. விபத்து தொடர்பான தகவல் அறிந்ததும், பிரதீப் குடும்பத்தினர் அமெரிக்கா விரைந்துள்ளனர்.