இந்தியாவில் தொலைதொடர்பு சேவைகள் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கடந்த ஏப்ரல் மாதத்தில் 120 கோடியைக் கடந்திருப்பதாக தொலைதொடர்பு துறை ஒழுங்காற்று அமைப்பான ட்ராய் தெரிவித்துள்ளது. 2025 ஏப்ரல் 30ஆம் தேதி இந்தியாவில் மொத்த தொலைதொடர்பு வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 120 கோடியே 38 லட்சமாக அதிகரித்துள்ளது. இதில் மொபைல் போன் வாடிக்கையாளர்கள் 116 கோடியே 64 லட்சம்; லேண்ட்லைன் தொலைபேசி வாடிக்கையாளர் எண்ணிக்கை மூன்று கோடியே 74 லட்சம்.
இது தவிர மே மாதத்தில் 31 லட்சம் வாடிக்கையாளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளதாக ட்ராய் அறிக்கை தெரிவிக்கிறது. தொலைதொடர்பு சேவை நிறுவனங்களில் 47 கோடியே 66 லட்சம் வாடிக்கையாளர்களுடன் ரிலையன்ஸ் ஜியோ முதல் இடத்தில் உள்ளது. மூன்று கோடியே 43 லட்சம் வாடிக்கையாளர்களுடன் அரசு தொலைதொடர்பு சேவை நிறுவனமான பிஎஸ்என்எல் நான்காம் இடத்தில் உள்ளது.