இந்தியா

உலக பாரம்பரிய சின்னமாக தெலங்கானா ராமப்பா கோவிலை அறிவித்துள்ளது யுனெஸ்கோ

EllusamyKarthik

தெலங்கானா மாநிலத்தில் அமைந்துள்ள ருத்ரேஸ்வரா கோவில் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கோவில் ராமப்பா கோவில் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 25 அன்று நடைபெற்ற உலக பாரம்பரிய கமிட்டி குழுவில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. 

இதன் மூலம் இந்தியாவின் 39வது உலக பாரம்பரிய சின்னமாகி உள்ளது இந்த கோவில். 12 மற்றும் 13வது நூற்றாண்டில் இந்த கோவில் கட்டப்பட்டுள்ளது. சுமார் 40 ஆண்டு காலம் கட்டுமான பணிகள் நடைபெற்றுள்ளது. 

முன்னதாக இந்தியாவில் உள்ள ஆறு இடங்களான காஞ்சிபுரம் பகுதியில் உள்ள கோவில்கள், வாரணாசியில் உள்ள கங்கை நதிக்கரை படித்துறை, சத்புரா புலிகள் காப்பகம் மாதிரியானவை இந்த உலக பாரம்பரிய சின்னத்திற்கான உத்தேச பட்டியலில் இடம் பெற்றிருந்தன.