இந்தியா

தெலங்கானா பள்ளிகளில் தெலுங்கு கட்டாயம்: சந்திரசேகர் ராவ் உத்தரவு

webteam

தெலங்கானா பள்ளிகளில் 12ஆம் வகுப்பு வரை தெலுங்கு கட்டாயம் என முதலமைச்சர் சந்திரசேகர்ராவ் உத்தரவிட்டுள்ளார்.

தெலங்கானாவில் உள்ள பள்ளிகள் அனைத்திலும் 1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை தெலுங்கு மொழி கட்டாயம் கற்பிக்கபட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் இத்தைகய உத்தரவை பிறப்பித்துள்ளார். 

தெலுங்கை கட்டாயப் பாடமாக கற்பிக்கும் கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமே அங்கீகாரம் வழங்கப்பட்டு, செயல்பட அனுமதிக்கப்படும் என்றும் அவர் கூறியிருக்கிறார். அடுத்த கல்வியாண்டு முதல் இந்த சட்டம் அமலுக்கு வர உள்ளது என்றும், தெலுங்கு கற்பிக்காமல் எந்த ஒரு கல்வி நிறுவனமும் தெலங்கானாவில் இயங்க முடியாது என்றும் அவர் எச்சரித்துள்ளார். இதுதவிர, தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் பெயர்ப் பலகைகளும் தெலுங்கில் எழுதப்பட வேண்டும் என்று அவர் உத்தரவிட்டுள்ளார்.