இந்தியா

“எங்களது துப்பாக்கியையே எடுத்து மிரட்டினர்” - என்கவுன்ட்டர் குறித்து போலீஸ் விளக்கம்

“எங்களது துப்பாக்கியையே எடுத்து மிரட்டினர்” - என்கவுன்ட்டர் குறித்து போலீஸ் விளக்கம்

webteam

என்கவுன்ட்டர் நடந்தது எப்படி என்பது குறித்து சைதராபாத் காவல் ஆணையர் சஜ்ஜானார் விளக்கம் அளித்துள்ளார். 

பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேர் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்நிலையில், என்கவுன்ட்டர் நடந்தது எப்படி என்பது குறித்து சைதராபாத் காவல் ஆணையர் சஜ்ஜானார் விளக்கம் அளித்துள்ளார். 

இதுகுறித்து சம்பவ இடத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “டிசம்பர் 4 ஆம் தேதி 4 பேரையும் காவலில் எடுத்து 2 நாட்கள் விசாரணை நடத்தினோம். பெண் மருத்துவரின் செல்போன் உள்ளிட்ட பொருட்களை வைத்திருப்பதாக கூறியதால் அதை எடுக்க அழைத்து வந்தோம். 4 பேரையும் அழைத்துச் சென்ற போது 10க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பிற்காக சென்றிருந்தனர். அப்போது, சென்ன கேசவலு, முகமது ஆரிஃப் ஆகியோர் எங்களது துப்பாக்கியை எடுத்து மிரட்டினர். நாங்கள் சொல்லச் சொல்ல கேட்காமல் எங்கள் மீது துப்பாக்கியால் சுட்டனர்.

மீதமுள்ள 2 பேர் கற்களை கொண்டு எங்களை தாக்கினர். இதில், இரண்டு போலீசாருக்கு காயம் ஏற்பட்டது. 4 பேரும் எங்களை தாக்கியபோதும் கூட போலீசார் அமைதி காத்தனர். சரணடைய வேண்டும் எனவும் கூறினர். அதிகாலை 5.45 மணி முதல் 6.15 க்குள் என்கவுன்ட்டர் சம்பவம் நடந்தது. இந்த விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்துள்ளது. காயம் அடைந்த 2 போலீசார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.