இந்தியா

தெலுங்கானா: 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை

தெலுங்கானா: 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை

JustinDurai

தெலுங்கானாவில் 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தததற்காக, 25 வயது இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டு ஹைதராபாத்தில் குடியிருப்பு காலனி ஒன்றில் தொழிலாளியாக வேலை செய்துவந்த சாய் (25) என்பவர், பக்கத்து வீட்டில் வசித்து வந்த 12 வயது சிறுமியுடன் நட்பாக பழகி வந்துள்ளார். சில மாதங்களுக்கு பின்பு சிறுமியை விசாகப்பட்டினத்திற்கு அழைத்துச் சென்ற சாய், இருவரும் ஒரு வாடகை அறையில் தங்கியுள்ளனர். அப்போது திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி சாய், அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் என்று போலீஸ் தெரிவித்துள்ளது.

சிறுமியின் குடும்பத்தினர் போலீசில் அளித்த புகாரின் அடிப்படையில், போஸ்கோ உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சாய் சிறையில் அடைக்கப்பட்டார். 

இந்த வழக்கு தொடர்பான விசாரணை எல்.பி.நகர் நீதிமன்றத்தில் நடந்துவந்த நிலையில், திங்கள்கிழமை தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி குற்றம்சாட்டப்பட்ட சாய்க்கு ஆயுள் தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதிக்கப்பட்டது.