இந்தியா

’என்னை எப்படியாவது காப்பாத்துங்க’’: சவுதியில் இருந்து ஒரு கண்ணீர் குரல்!

’என்னை எப்படியாவது காப்பாத்துங்க’’: சவுதியில் இருந்து ஒரு கண்ணீர் குரல்!

webteam

தன்னைக் காப்பாற்றும்படி சவுதி அரேபியாவில் இருந்து தெலங்கானா வாலிபர் கதறும் வீடியோ காட்சி பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தெலங்கானா மாநிலம் ராஜன்னா ஸ்ரீசில்லா மாவட்டத்தைச் சேர்ந்தவர் முகமது ஷமீர் (21). இவர் கடந்த ஏப்ரல் மாதம் 17 ஆம் தேதி சவுதி அரேபியாவுக்கு வேலைக்காகs சென்றார். ஏஜெண்ட் இவரிடம், பண்ணைவீட்டில் வேலை என்று கூறியிருந்தார். அதை நம்பி பணம் கொடுத்து சென்றார் ஷமீர். சவுதிக்குச் சென்ற பிறகுதான், அவருக்கு உண்மை புரிந்தது. அதாவது அவருக்கு வேலை எனச் சொல்லப்பட்ட இடத்தில் இருந்து 1200 கி.மீ தூரத்தில் உள்ள பாலைவனத்தில் ஆடுகளை மேய்க்கக் கூறினர். சுமார் 300 செம்மறியாடுகள்.

‘நான் ஆடு மேய்க்க வரலை. எனக்கு பண்ணை வீட்டுலதான் வேலைன்னு சொன்னாங்க. நான் இதை பண்ண மாட்டேன்’’ என்றார் ஷமிர்.  ஆத்திரமடைந்த ஷமீரின் ஓனர், சரமாரியாகத் தாக்கத் தொடங்கினார். சொன்னதை செய் என்று எச்சரித்துவிட்டு சென்றார். கொளுத்தும் வெயி லில் அந்த ஆடுகளை மேய்ப்பது எளிதான வேலை அல்ல என்பது ஷமீருக்குப் புரிந்தது. தொடர்ந்து தாக்கப்பட்டு வந்ததால் செல்போன் வீடியோ வில் தன் நிலையை விவரித்து தனது நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் அனுப்பினார் ஷமிர். இந்த வீடியோ தெலங்கானா மற்றும் ஆந்திராவில் வைரலானது.

அதில் கண்ணீர் மல்க பேசும் ஷமீர், ‘’ஏஜெண்ட் பணத்தை வாங்கிக்கொண்டு என்னை ஏமாற்றி விட்டார். சொன்ன வேலை ஒன்று, கொடுத்த வேலை ஒன்று. கடுமையான சித்தரவதைகளைச் சந்தித்து வருகிறேன். கடந்த 20 நாட்களாக நான் பட்டினியாகக் கிடந்து கொடுமைகளை அனுபவிக்கிறேன். இங்கு என்னால் வாழ முடியாது. ஆனால், நான் செத்தாலும் கவலை இல்லை என்று அவர்கள் என்னை அடித்து துன்புறுத்து கிறார்கள். ஒவ்வொரு நாளும் என்னை மிரட்டிவிட்டு செல்கிறார்கள். என்னை எப்படியாவது காப்பாற்றுங்கள்’’ என்று தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக, சிர்சிலா எம்எல்ஏ கே.டி.ராமாராவ் கூறும்போது, ‘’இதுபற்றி ரியாத்தில் உள்ள இந்திய தூதரகத்திடம் தெரிவித் துள்ளோம். எவ்வளவு விரைவாக அவரை தாயகம் அழைத்து வரமுடியுமோ, அவ்வளவு விரைவாக அழைத்து வந்துவிடுவோம்’’ என்றார்.

இதுபோன்ற கதறல் வீடியோ வெளியிடுவது இது இரண்டாவது முறை. ஒரு வாரத்துக்கு முன் தெலங்கானா மாநிலம் கரீம்நகரை சேர்ந்த வீரய்யா என்ற தொழிலாளி, சவுதி அரேபியாவில் இருந்து தான் சித்ரவதைச் செய்யப்படுவதாகக் கூறியிருந்தார். தான் மேய்க்கும் ஒட்டகங் களில் ஒன்று இறந்து விட்டதற்காக, தான் கடுமையாகத் தாக்கப்பட்டதாகவும் கூறியிருந்தார். அவரை மீட்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.