கவிதா
கவிதா முகநூல்
இந்தியா

கவிதாவுக்கு அமலாக்கத்துறை காவல் நீட்டிப்பு!

PT WEB

செய்தியாளர்: ராஜீவ்

"அரசியல் ஆதாயத்திற்காக என் மீது பொய் வழக்கு புனையப்பட்டுள்ளது " - டெல்லி விசாரணை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட கவிதா திட்டவட்டம் 

டெல்லி, புதிய மதுபான கலால் வரை கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த 15ம் தேதி ஹைதராபாத்தில் உள்ள தெலுங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையின் முடிவில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கவிதா கைது செய்யப்பட்ட நிலையில் கடந்த 16ம் தேதி டெல்லியில் உள்ள ரோஸ் அவன்யூ நீதிமன்றத்தில் கவிதா ஆஜர் படுத்தப்பட்டார்.

ஆஜர் படுத்தப்பட்டதை தொடர்ந்து விசாரணைக்காக 7 நாட்கள் விசாரணை காவல் வழங்கப்பட்டது.  இதனிடைய விசாரணை காவல் இன்றுடன் முடிவடையும் நிலையில் மீண்டும் டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் கவிதா ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, சட்டவிரோதமாக தன்னை கைது செய்திருப்பதாகவும் இதனை எதிர்த்து நீதிமன்றத்தில் போராட இருப்பதாக கூறியுள்ளார்.

மேலும் இது குறித்து அவர்கள் தெரிவிக்கையில், “அரசியல் ஆதாயத்திற்காக என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. இது புனையப்பட்ட பொய் வழக்கு.மேலும் என்னிடம் கேட்ட அதே கேள்வியை மீண்டும் மீண்டும் அமலாக்கத்துறை கேட்கிறார்கள்.” என்று தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து நீதிபதி முன்பு கவிதா ஆஜர் படுத்தப்பட்ட நிலையில் விசாரணை மற்றும் வழக்குக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெற்ற வருவதால் கூடுதலாக 5 நாட்கள் அமலாக்கத்துறை விசாரணை காவல் வழங்க வேண்டும் என அமலாக்கத்துறை தரப்பு கோரிக்கை வைத்துள்ளது.ஆனால் 3 நாட்கள் காவலை நீட்டித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.