தெலங்கானாவில் கொரோனா தாக்கம் குறையாத காரணத்தினால், இம்மாதம் 30-ஆம் தேதிவரை அங்கு பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவை கட்டுப்படுத்த தெலங்கானாவில் கடந்த 12ஆம் தேதி முதல் 10 நாட்களுக்கு பொதுமுடக்கத்தை அமல்படுத்தி, அம்மாநில அரசு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், நோய்பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதை அடுத்து இம்மாதம் 30ஆம் தேதி வரை பொதுமுடக்கத்தை நீட்டித்து தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார். மளிகை, காய்கறி மற்றும் மருந்துக் கடைகளை மட்டும் திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.