இந்தியா

“என்னை சுட்டுக் கொல்லுங்கள்” - இரவு நேரத்தில் சிறுமிகளிடம் விபரீதம்; ‘சைகோ’ மேஸ்திரி கைது

“என்னை சுட்டுக் கொல்லுங்கள்” - இரவு நேரத்தில் சிறுமிகளிடம் விபரீதம்; ‘சைகோ’ மேஸ்திரி கைது

kaleelrahman

சிறுமிகளை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து வந்த ஒடிசாவை சேர்ந்த கட்டிட மேஸ்திரியை போலீசார் கைது செய்தனர்.

ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் கட்டிட மேஸ்திரி அபிரந்தாஸ் என்கிற அபி. இவர் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள கீசரா மண்டலம் பந்தலகுடா 60 யார்ட்ஸ் காலனியில் தங்கி கட்டிட மேஸ்திரியாக பணி செய்து வந்துள்ளார். இரவு நேரம் ஆனால் தனியாக உள்ள பெண்களிடம் சென்று பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். பின்னர், சிறுமிகளையும் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ய தொடங்கியுள்ளார்.

இதனால் இந்த மாதம் 4ஆம் தேதி ஜவகர் நகர் பகுதியில் உள்ள தம்மாய்குடாவைச் சேர்ந்த நான்கு வயது சிறுமியை அபி கடத்திச் சென்று பாலியியல் வன்கொடுமை செய்து மறுநாள் பிரகதி நகர் அருகே சிறுமியை விட்டு சென்றார். பலத்த காயமடைந்த சிறுமிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து பெற்றோர் அளித்த புகாரை வைத்து போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர்.

இந்நிலையில், மீண்டும் 9ஆம் தேதி ஜவஹர் நகர் தானா பகுதியில் இதேபோன்று வீட்டின் வெளியே விளையாடி கொண்டுருந்த சிறுமியை கடத்தி செல்ல முயன்றபோது அங்கிருந்து தப்பித்து சென்று அந்த சிறுமி பெற்றோருக்கு தகவல் தெரிவித்தது. உடனடியாக பெண்கள் அனைவரும் சேர்ந்த அபியை பிடிக்க முயன்றபோது அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அங்கு வைக்கப்பட்டுருந்த சி.சி. டி.வி கேமிரா காட்சிகளை ஆதாரமாக கொண்டு போலீசார் அபியை கைது செய்தனர்.

ராச்சகொண்டா காவல் ஆணையத்திற்கு உட்பட்ட ஜவகர் நகர் போலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சியூட்டும் உண்மைகள் தெரியவந்தது. பகல் நேரத்தில் இயல்பாக இருப்பதாகவும் இரவு நேரமானால் தன் மனைவி ’நீ குடும்பம் நடத்த சரிபட்டு வரமாட்டாய்’ என்று கூறிய வார்த்தை காதில் கேட்டு கொண்டே இருப்பதாகவும் அதனால்தான் இவ்வாறு செய்ததாகவும் தான் தங்கி இருக்கும் வீட்டை சுற்றி வனப்பகுதி என்பதால் இரவில் இரண்டு கிலோ மீட்டர் வரை நடந்தபடி ஜவகரை நகரைச் சுற்றியுள்ள பகுதிகளுக்குச் சென்று தனியாக உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளை கடத்தி பாலியியல் வன்கொடுமை செய்ததாக கூறியுள்ளார்.

மேலும் விசாரணையின் போது தன் நெற்றியில் துப்பாக்கியை வைத்து சுட்டு கொள்ளுமாறு போலீசாரிடம் அபி பலமுறை கேட்டு கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.