இந்தியா

தெலங்கானாவில் லாரி -ஆட்டோ மோதி விபத்து: 7 பேர் பலி , 13 பேர் படுகாயம்

தெலங்கானாவில் லாரி -ஆட்டோ மோதி விபத்து: 7 பேர் பலி , 13 பேர் படுகாயம்

Veeramani

தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தில், பயணிகள் ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் 6 பெண்கள் உட்பட 7 பேர் உயிரிழந்தனர், 13 பேர் படுகாயமடைந்தனர்.

தெலங்கானா மாநிலம் டேவரகொண்டா மண்டல் பகுதிக்கு அருகில் உள்ள கிராமத்திலிருந்து விவசாய வேலை முடித்துவிட்டு, ஒரு பயணிகள் ஆட்டோவில் 20 க்கும் மேற்பட்ட விவசாய தொழிலாளர்கள் நேற்று மாலை வீடு திரும்பிக்கொண்டிருந்தார்கள். அப்போது ஆட்டோ மீது லாரி போதிய விபத்தில் சிக்கிய, ஆட்டோவில் பயணம் செய்த ஆறு பெண்கள் உட்பட 7 பேர் உயிரிழந்தனர், 13 பேர் படுகாயமடைந்தனர்.

விபத்தில் படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள், லாரியின் ஓட்டுநரை கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ளோம் என நல்கொண்டா மாவட்ட எஸ்.பி ரங்கநாத் தெரிவித்தார்.

இந்த அதிர்ச்சி சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்த தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், படுகாயமடைந்தவர்களுக்கு உயர் சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளார்