இந்தியா

நிதிஷ் முதல்வராக தேஜஸ்வி கடும் எதிர்ப்பு

நிதிஷ் முதல்வராக தேஜஸ்வி கடும் எதிர்ப்பு

webteam

நிதிஷ் குமார் முதலமைச்சர் பதவியேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதை எதிர்த்து துணை முதல்வரும் லாலுவின் மகனுமான தேஜஸ்வி யாதவ் போர்க்கொடி தூக்கியுள்ளார்.

சட்டப்பேரவையில் தனிப்பெரும் கட்சி என்ற வகையில் தங்களையே ஆட்சி அமைக்க ஆளுநர் அழைத்திருக்க வேண்டுமென அவர் தெரிவித்தார். இந்த எதிர்ப்பைத் தொடர்ந்து தேஜஸ்வி மற்றும் 5 ராஷ்ட்ரீய ஜனதாதள எம்எல்ஏக்களை பேச்சு வார்த்தை நடத்த ஆளுநர் கேசரிநாத் திரிபாதி அழைத்தார். இதைத் தொடர்ந்து தேஜஸ்வி உள்ளிட்ட எம்எல்ஏக்கள ஆளுநர் மாளிகையை நோக்கி நள்ளிரவில் பேரணியாக சென்றனர்.

நிதிஷ் குமாருக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கும் முடிவை நிறுத்தி வைக்குமாறும் பெரும்பான்மையை நிரூபிக்க தங்களுக்கு முதல் வாய்ப்பு தருமாறும் ஆளுநரை கேட்டுக்கொண்டதாக தேஜஸ்வி தெரிவித்தார். நிதிஷ் முதல்வராகும் பட்சத்தில் மாநிலமெங்கும் போராட்டங்கள் வெடிக்கும் என்றும் தேஜஸ்வி எச்சரித்தார். இவ்விவகாரத்தில் நீதிமன்றத்தை அணுகவும் தாங்கள் ஆலோசிப்பதாக அவர் கூறினார்.