இந்தியா

தாமதமாக புறப்பட்ட ரயில் - பயணிகளுக்கு ரூ.1.60 லட்சம் இழப்பீடு

webteam

ரயில் தாமதமாக புறப்பட்ட காரணத்திற்காக முதன்முறையாக பயணிகளுக்கு இழப்பீடு தொகை வழங்கப்பட உள்ளது.

டெல்லி - லக்னோ இடையில் ஐஆர்சிடிசியால் இயக்கப்படும் தேஜஸ் விரைவு ரயில் கடந்த 19-ஆம் தேதி 3 மணி நேரம் தாமதமாகப் புறப்பட்டுச் சென்றது. இதனால், மறுவழித்தடத்தில் லக்னோவிலிருந்து டெல்லி திரும்புவதிலும் தாமதம் ஏற்பட்டது. தேஜஸ் விரைவு ரயிலில் பயணம் ‌மேற்கொள்வோருக்கு டிக்கெட் கட்டணத்துடன் காப்பீடும் செய்யப்படுகிறது. 

இந்நிலையில், தேஜஸ் விரைவு ரயில் தாமதமாக வந்து சென்றதால் அன்றைய தினம் பயணம் செய்தவர்களுக்கு காப்பீடு தொகையாக ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாயை ஐஆர்சிடிசி வழங்க உள்ளது. இந்தியாவில் முதன்முறையாக இழப்பீடு தொகை வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.