ஆற்றின் நடுவே உள்ள பாறையில் செல்ஃபி எடுக்கச்சென்ற இளம்பெண்கள் ஆற்றுவெள்ளத்தால் சிக்கிய சம்பவம் மத்திய பிரதேச மாநிலம் சிந்த்வாராவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
சிந்த்வாரா மலைப்பகுதியுள்ள ஆற்றுக்கு நடுவிலுள்ள பாறையில் அமர்ந்து செல்ஃபி எடுத்துக்கொண்டிருக்கும்போதே ஆற்று நீர்மட்டம் அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. ஆனால், செஃல்பி எடுப்பதில் கவனம் செலுத்திய இளம்பெண்களுக்கு ஆற்று வெள்ளம் வரப்போகிறது என்பது ஆரம்பத்திலேயே தெரியவில்லை. சிறிது, நேரத்திலேயே வெள்ளம்போல் தண்ணீர் அடித்துக்கொண்டுவர, காப்பாற்றச்சொல்லி கூச்சல் போட்டிருக்கிறார்கள். இதனைப்பார்த்த, அக்கம்பக்கத்தினர் தகவல் கொடுத்ததின் பேரில் காவல்துறையினர் கயிறுகட்டிக்கொண்டு போய் காப்பாற்றினார்கள்.
இதுகுறித்து, காப்பாற்றிய காவல்துறை அதிகாரிகள் பேசும்போது, “செல்ஃபி எடுப்பது தவறில்லை. ஆனால், இதுபோன்ற ஆபத்தான இடங்களில் செல்ஃபி எடுப்பதை தவிர்க்கவேண்டும். மழை நேரம் காரணமாக வெள்ளம் வந்திருக்கிறது. சுமார், ஒருமணிநேர கடுமையான போராட்டத்துக்குப்பிறகுதான் அந்த இரண்டு பெண்களையும் காப்பாற்ற முடிந்தது. துரித நடவடிக்கையால் அவர்கள் உயிர்பிழைத்தார்கள்” என்றதோடு இளம்பெண்களுக்கு அறிவுரைச் சொல்லி அனுப்பியிருக்கிறார்