இந்தியா

இளம் பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை! 4 பேர் கைது

இளம் பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை! 4 பேர் கைது

webteam

ஆந்திராவில் 16 வயது இளம்பெண்ணை 5 நாட்கள் அறையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த 4  பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் வெளியிட்ட தகவலின்படி, கடந்த ஜூன் 17ம் தேதி 16 வயது இளம்பெண் ஒருவர், அவரது ஆண் நண்பருக்காக பிரகாசம் மாவட்டத்தில் உள்ள பேருந்து நிலையத்தில் காத்திருந்துள்ளார். அப்போது அப்பெண்ணை தனது அறைக்கு அழைத்துச் சென்ற ஆண் நண்பர் அங்கிருந்த தன் சக நண்பர்கள் 5 பேருடன் சேர்ந்து இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். 

5 நாட்கள் அறையினுள் அடைத்துவைத்து இளம்பெண்ணை 6 பேர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அதில் 3 பேர் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் ஆவர். அறையில் இருந்து தப்பிய இளம்பெண் காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளார். பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சேர்த்த காவலர்கள், பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் 2 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

இது குறித்து பேசியுள்ள ஆந்திர மாநிலத்தின் உள்துறை அமைச்சர் சுஜாரிதா, ''இது ஒரு கொடூரமான குற்றம், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் பார்த்துக் கொள்வதற்கு நாங்கள் தடுப்பு நடவடிக்கைகளை எடுப்போம்'' என தெரிவித்துள்ளார்.