இந்தியா

உயிருக்குப் போராடியவரைக் காப்பாற்றாமல் வீடியோ எடுத்த மக்கள்!

உயிருக்குப் போராடியவரைக் காப்பாற்றாமல் வீடியோ எடுத்த மக்கள்!

webteam

சாலை விபத்தில் படுகாயமடைந்து உயிருக்கு போராடிய பொறியாளருக்கு உதவாமல், செல்போனில் புகைப்படம், வீடியோ எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் புனே அருகிலுள்ள போஷாரி பகுதியில், நேற்று அடையாளம் தெரியாத கார் மோதியதில் சதிஷ் பிரபாகர் என்ற என்ஜினீயர் பலத்த காயமடைந்தார். உயிருக்குப் போராடியபடி சாலையில் கிடந்த அவரைச் சுற்றிக் கூடிய கூட்டம், செல்போனில் புகைப்படம், வீடியோ எடுத்தது. யாருக்கும் அவரை மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டும் என்ற எண்ணம் வரவே இல்லை. அந்த வழியாக வந்த கார்த்திக் ராஜ் கடே என்ற பல் மருத்துவர், என்ன கூட்டம் அது என்று எட்டிப் பார்த்தார். அப்போது படுகாயமடைந்து கிடந்தவருக்கு உயிர் இருந்தது தெரிந்தது. இதையடுத்து ஒரு ஆட்டோவில் அவரை ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார் கார்த்திக் ராஜ். ஆனால், ரத்தம் அதிமாக வெளியேறிவிட்டதால் அவர் மரணமடைந்தார். காயமடைந்த உடனேயே மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருந்தால் அவர் உயிர்பிழைத்திருப்பார் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்த ஒருவருக்கு உதவாமல் பொதுமக்கள் வேடிக்கை பார்த்தபடி செல்போனில் புகைப்படம் எடுத்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.