இந்தியா

கேரளா : மூணாறு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 42 ஆக அதிகரிப்பு.

கேரளா : மூணாறு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 42 ஆக அதிகரிப்பு.

Veeramani

கேரளாவின் இடுக்கி மாவட்டத்திலுள்ள மூணாறு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 42 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த சில நாட்களாக மூணாறு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் பெய்யும் தொடர்மழையால் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. நேற்று முன்தினம் அதிகாலையில் ராஜமலை பெட்டிமுடி பகுதியில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், அந்தபகுதியில் தேயிலை தோட்டத்தில் உள்ள 20 வீடுகளும் மண்ணுக்குள் புதைந்தன. அதிலிருந்து மேற்கூரையை உடைத்து கொண்டு சிலர் மட்டும் வெளியே வந்து விட்டனர், பலர் காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்.

ராஜமலை-பெட்டிமுடி இடையே மலைப்பாதையில் பெரியபாறையாற்றின் குறுக்கே உள்ள தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதனால் மீட்பு பணியில் வாகனங்களை ஈடுபடுத்த முடியாத நிலை ஏற்பட்டது. எனவே உடுமலைப்பேட்டை பகுதி வழியாக பொக்லைன் எந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டு மீட்பு பணி துரிதப்படுத்தப்பட்டது. அவ்வப்போது மழை பெய்வதால் மீட்பு பணியில் தடைகள் உருவாகின்றன. இருந்தாலும் கனமழையிலும் தொடர்ந்து  மீட்பு பணிகள்  நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் மூணாறு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 42 ஆக அதிகரித்துள்ளது.