இந்தியா

வகுப்பறைக்குள் மாணவியிடம் அத்துமீறிய ஆசிரியர் கைது

வகுப்பறைக்குள் மாணவியிடம் அத்துமீறிய ஆசிரியர் கைது

Rasus

வகுப்பறைக்குள் வைத்து மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி செய்த ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் தோடா மாவட்டத்தில் அரசாங்க பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு 8-ம் வகுப்பு படித்து வரும் மாணவி சுதா. (பெயர் மாற்றப்பட்டுள்ளது). கடந்த சில தினங்களுக்கு முன், பள்ளியின் அசெம்ப்ளி கூட்டத்தில் பங்கேற்க அனைத்து மாணவ- மாணவிகளும் கூடியிருக்கின்றனர். அந்த நேரத்தில் போலியாக ஒரு காரணத்தை கூறி சுதாவை வகுப்பறைக்கு அழைத்திருக்கிறார் 48 வயது ஆசிரியர் மனாஸ். சுதாவும் ஆசிரியர் அழைத்தவுடன் வகுப்றைக்கு சென்றபோது வகுப்பறையின் கதவை மூடிய மனாஸ், சுதாவை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்திருக்கிறார்.

இதனையடுத்து அலறியத்த சுதா, கதவை திறந்துகொண்டு வெளியே ஓடிவந்திருக்கிறார். பின்னர் சுதாவின் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் மனாஸை போலீசார் கைது செய்தனர்.