இந்தியா

ஏர் இந்தியாவுடன் இணைகிறது ஏர் ஆசியா!

JustinDurai

டாடாவுக்குச் சொந்தமான ஏர் இந்தியா, அதன் துணை நிறுவனமான ஏர் ஆசியா இந்தியாவை இணைக்க முடிவு செய்துள்ளது.

1953 ஆம் ஆண்டு தேசியமயமாக்கப்பட்ட ஏர் இந்தியா நிறுவனத்தை, 69 ஆண்டுகளுக்குப் பின் கடந்த ஜனவரி மாதம் டாடா நிறுவனம் முறையாக திரும்பப் பெற்றது. இதனிடையே ஏர் ஆசியா இந்தியா நிறுவனத்தின் 83.67 சதவிகித பங்குகளை டாடா நிறுவனம் வைத்துள்ளது. மீதமுள்ள பங்குகளை மலேசியாவின் ஏர் ஆசியா குழுமத்தைச் சேர்ந்த ஏர் ஆசியா இன்வெஸ்ட்மென்ட் நிறுவனம் வைத்துள்ளது.

இந்நிலையில், டாடா நிறுவனம் 4 விமான நிறுவனங்களை ஒருங்கிணைக்கும் முயற்சியில் உள்ளது. இதன் மூலம் ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ். விஸ்தாரா, ஏர் ஆசியா இந்தியா மற்றும் ஏர் இந்தியா ஏர்ப்போர்ட் சர்வீஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனங்கள் ஒரே அலுவலகத்தில் சேவையை வழங்க உள்ளன.

இதையும் படிக்க: 'கார்ல போனா ஹெல்மெட் போடமாட்டீங்களா' அபராதம் விதித்த போக்குவரத்து காவலரால் சர்ச்சை