ஆன்லைன் மூலம் இந்தியாவில் மளிகை பொருட்களை விநியோகித்து வரும் பிக்பாஸ்கெட்டின் 68 சதவிகித பங்குகளை வாங்க டாடா குழுமம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அதனால் அந்நிறுவனம் பிக்பாஸ்கெட்டில் சுமார் 9500 கோடி ரூபாயை முதலீடு செய்கிறது. இதன் மூலம் அலிபாபா மற்றும் அப்ராஜ் குழுமம் பிக்பாஸ்கெட்டிலிருந்து வெளியாகும் எனத் தெரிகிறது.
கடந்த 2011-இல் பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு பிக்பாஸ்கெட் நிறுவனம் தொடங்கப்பட்டது.
டாடா குழுமம் இதில் இணைவதன் மூலம் இந்த இ - காமர்ஸ் சந்தையில் கோலோச்சி வரும் மற்ற நிறுவனங்களுக்கு சரியான போட்டியாக இருக்கும் என தெரிவித்துள்ளனர் பொருளாதார நிபுணர்கள்.