அமெரிக்க அதிபர் இந்தியாவிற்கு எதிராக வரிவிதிப்பு அதிகரிக்கும் என்று மறைமுகமாக கூறியுள்ளார்.
அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப், இன்னும் சில நாட்களில் அதிகாரப்பூர்வமாக பதவி ஏற்க இருக்கிறார். இந்நிலையில், ட்ரம்பிடம் சீனாவுடனான வர்த்தக உடன்படிக்கை தொடர்பாக எழுப்பப்பட்ட சில கேள்விகளுக்கு, பதிலளித்தார். அப்போது அவர், சில அமெரிக்க பொருட்களுக்கு அதிக வரி விதிக்கும் நாடுகளில் இந்தியாவும் பிரேசிலும் இருப்பதாகவும் இதனால் இந்தியாவுக்கு எதிரான வரியானது உயர்த்தப்படும் என்று மறைமுகமாக எச்சரித்துள்ளார்.
இந்தியாவானது சில அமெரிக்க பொருட்களின் இறக்குமதி மீது "அதிக சுங்க வரி" விதித்துள்ளது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், பரஸ்பர வரிகளை அமெரிக்காவும் விதிக்கும் என தனது விருப்பத்தை வலியுறுத்தியுள்ளார்.
“பரஸ்பரம் என்ற சொல்லானது ... “அவர்கள் எங்களுக்கு வரி செலுத்தினால், அதே அளவு நாங்கள் வரி செலுத்துகிறோம். அதே போல் அவர்கள் எங்களுக்கு வரி விதிக்கிறார்கள் என்றால் அவர்களுக்கு அதே அளவு வரியை நாங்கள் விதிக்க இருக்கிறோம். மேலும் சில சந்தர்ப்பங்களில் அவர்கள் எங்களுக்கு வரி விதித்தாலும், நாங்கள் அவர்களுக்கு வரி விதிக்கவில்லை, இனி இந்நிலமை மாறும்.
இந்தியா எங்களிடம் ஒரு சைக்கிளை அனுப்புகிறார்கள், நாங்கள் அவர்களுக்கு ஒரு சைக்கிளை அனுப்புகிறோம். எங்களிடம் 100 மற்றும் 200 வசூலிக்கிறார்கள். ஆனால் நாங்கள் வசூலிக்கவில்லை. இந்தியா மற்றும் பிரேசில் அதிக கட்டணம் வசூலிக்கிறது. அவர்கள் எங்களிடம் கட்டணம் வசூலிக்க விரும்பினால், அது பரவாயில்லை, ஆனால் நாங்கள் அவர்களிடம் அதே கட்டணத்தை மீண்டும் வசூலிக்கப் போகிறோம், ”என்று டிரம்ப் திங்களன்று செய்தியாளர்களிடம் கூறினார்.