மகாராஷ்ட்ரா மாநிலத்தில் ராணுவ உபகரணங்களை பராமரிப்பு செய்த போது உயிரிழந்த மேலூரைச் சேர்ந்த ராணுவ வீரரின் உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே கோட்டப்பட்டியைச் சேர்ந்தவர் பிரகாஷ் (40) . இவர் மகாராஷ்ட்ரா மாநிலத்தில் ராணுவத்தில் ஹவில்தாராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், அங்கு ராணுவ உபகரணங்களை பராமரிப்பு செய்தபோது மெத்தனால் வாயு தாக்கி உயிரிழந்தார்.
இதனைத்தொடர்ந்து உயிரிழந்த இராணுவ வீரரின் உடலை அவரின் சொந்த ஊராண மேலூர் அருகே கோட்டப்பட்டிக்கு ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் கொண்டு வரப்பட்டது.
மேலும் இராணுவ வீரரின் உடலுக்கு இராணுவ அதிகாரிகள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். இதையடுத்து அரசு சார்பில் கிராம நிர்வாக அலுவலர் அனுராதா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
உயிரிழந்த இராணுவ வீரர் பிரகாஷிர்க்கு , அழகு என்ற மனைவியும், ரக்ஷன் (7) என்ற மகனும், ஜெயஸ்ரீ ஹானா (5) என்ற மகளும் உள்ளனர்.