தமி்ழகத்தில் யார் ஆட்சி அமைப்பது என்பது குறித்து ஆளுநரே முடிவு எடுப்பார் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ராஜ்நாத் சிங், தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழல் குறித்த இறுதி முடிவை ஆளுநரே எடுப்பார் என ராஜ்நாத் சிங் தெரிவித்தார். மாநில அரசியல் அமைப்பு செயல்பாட்டிற்கு ஆளுநரே தலைவர் என்றும் அவர் கூறினார்.
முன்னதாக, தமிழக அரசியல் நிலவரம் குறித்து குடியரசுத் தலைவர் அலுவலகம், பிரதமர் அலுவலகம், உள்துறை அமைச்சகம் ஆகியவற்றுக்கு வித்யாசாகர் ராவ் அறிக்கை அனுப்பியிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா ஆகியோருடனான சந்திப்பிற்கு பின்னரே, இந்த அறிக்கையை ஆளுநர் அனுப்பியிருப்பதாக மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.