தெலங்கானா ஆளுநராக வரும் 8-ஆம் தேதி தமிழிசை சவுந்தரராஜன் பதவியேற்க உள்ளார்.
2014-ஆம் ஆண்டு முதல், தமிழக பாரதிய ஜனதா தலைவர் பதவியிலிருந்து வந்த தமிழிசை சவுந்தரராஜன், தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டார். இதனையடுத்து பல தரப்பில் இருந்தும் அவருக்கு வாழ்த்துகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. ஆளுநராக நியமிக்கப்பட்டதால், தனது கட்சிப் பதவியையும், அடிப்படை உறுப்பினர் பதவியையும் தமிழிசை ராஜினாமா செய்தார்.
இந்நிலையில், தெலங்கானா ஆளுநராக வரும் 8-ஆம் தேதி தமிழிசை சவுந்தரராஜன் பதவியேற்க உள்ளார்.