இந்தியா

தமிழக மாணவர்கள் வஞ்சிக்கப்படவில்லை - சிபிஎஸ்இ விளக்கம்

rajakannan

நீட் தேர்வு மையம் ஒதுக்குவதில் தமிழக மாணவர்கள் வஞ்சிக்கப்பட்டதாக வெளியான தகவல் தவறு என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக சிபிஎஸ்இ வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழில் படித்த மாணவர்களுக்கு தமிழகத்திலேயே மையங்கள் ஒதுக்கப்பட்டன. தமிழக மாணவருக்கு ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக கூறுவது தவறு. தமிழக மாணவர் விருப்பப்பட்டே மையத்தை தேர்வு செய்ததாக ஆன் லைன் விண்ணப்ப பதிவு காட்டுகிறது. 
மொத்தம் 2,255 மையங்களில் 4 மையங்களில் மட்டும் வினாத்தாள் வேறு மொழியில் வந்ததாக தகவல் வந்தது” என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், “நீட் தேர்வை தமிழில் 24,720 பேர் எழுதினர். ஆங்கிலத்தில் 10.60 லட்சம் பேர் எழுதினர். நாடு முழுவதும் 2,255 மையங்களில் 13.26 லட்சம் மாணவ, மாணவிகள் நீட் தேர்வை எழுதினர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.