இந்தியா

மாநில உணவு பாதுகாப்பு குறியீட்டில் முதலிடம் பிடித்தது தமிழ்நாடு!

ச. முத்துகிருஷ்ணன்

இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் மாநில உணவு பாதுகாப்பு குறியீட்டில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது. நாட்டு மக்களுக்கு பாதுகாப்பான உணவை உறுதி செய்யும் பொருட்டு, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை ஊக்குவிப்பதற்காக உணவு பாதுகாப்பு குறியீடு அறிமுகப்படுத்தப்பட்டது.

உணவு பாதுகாப்பு தினத்தையொட்டி, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் மாநில உணவு பாதுகாப்பு குறியீட்டை மத்திய அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா வெளியிட்டார். டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், வளமான இந்தியா அமைய ஆரோக்கியமான குடிமக்களை கொண்ட இந்தியா உருவாக வேண்டும் என தெரிவித்தார்.

2021-22ஆம் ஆண்டுக்கான தரவரிசைப் பட்டியல் வெற்றி பெற்ற மாநிலங்களுக்கு அவர் பாராட்டு தெரிவித்தார். மாநில உணவு பாதுகாப்பு குறியீட்டில் பெரிய மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. குஜராத் 2வது இடம், மகாராஷ்டிரா 3வது இடத்தை பிடித்துள்ளது. சிறிய மாநிலங்கள் பட்டியலில் கோவா முதலிடம், மணிப்பூர் 2வது இடம், சிக்கிம் 3வது இடத்தை பிடித்துள்ளது.