இந்தியா

டெல்லி குடியரசு தின அணிவகுப்பில் ‘நகரும் மாமல்லபுரம் கடற்கரை கோயில்’ தமிழக அலங்கார ஊர்தி

EllusamyKarthik

டெல்லியில் நடைபெற்ற 72-வது குடியரசு தின விழா, கொரோனா பெருந்தொற்று நோயை கருத்தில் கொண்டு மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் நடத்தப்பட்டது. 25,000 பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி கொடுக்கப்பட்டிருந்த இந்த நிகழ்வில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கொடியேற்றி தொடக்கி வைத்தார்.

முப்படைகளின் அணிவகுப்பை தொடர்ந்து இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் அலங்கார ஊர்திகளும் இந்த அணிவகுப்பில் பங்கேற்றன. இதில் தமிழகத்தின் அலங்கார ஊர்தியாக பல்லவ சாம்ராஜ்யத்தின் புகழை உலகிற்கு எடுத்துக்கூறும் வகையில் நகரும் வாகனத்தில் மாமல்லபுரம் கடற்கரை கோயிலை தத்ரூபமாக வடிவமைத்திருந்தனர் கலைஞர்கள். 

அந்த வாகனத்தில் தமிழகத்தின் பாரம்பரிய நடன கலைகளில் ஒன்றான பரதநாட்டியமும் இடம் பெற்றிருந்தது. நான்கு பரதநாட்டியக் கலைஞர்கள் அதில் நடனமாடியிருந்தனர். கூடவே மங்கள இசையான நாதஸ்வர மற்றும் தவில் இசையும் ஒலித்தன.   

நன்றி : ராஜ்ய சபா டிவி