இந்திய அளவில் தினசரி கொரோனா பாதிப்பில் தமிழகம் 2 ஆவது இடத்தில் இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் சுமார் 35 லட்சத்து 17 ஆயிரம் பேர் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் பதிவாகி உள்ள மொத்த கொரோனா பாதிப்பில் 76 சதவீதம் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட 10 மாநிலங்களைச் சேர்ந்தவையாகும். மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக தமிழகத்தில்தான் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இவ்விரு மாநிலங்களுடன் உத்தரப் பிரதேசம், டெல்லி, கர்நாடகாவில்தான் கொரோனா உயிரிழப்புகள் அதிகம் உள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதேசமயம், கடந்த 5 நாட்களில் தினசரி பாதிப்பு வெகுவாக குறைந்து வருவதாகவும், 26 நாட்களுக்கு பிறகு இன்றைய தினசரி பாதிப்பு 3 லட்சத்திற்கும் கீழ் குறைந்திருப்பதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.