காங்கிரஸ் ஆட்சி காலத்தை விட பாஜக ஆட்சிகாலத்தில், 342 சதவீத அதிக மானியம் மற்றும் உதவி தமிழ்நாட்டிற்கு வழங்கப்படவுள்ளதாக, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் பேசிய நிர்மலா சீதாராமன், 2004 முதல் 2014 வரை மத்திய அரசின் உதவி மற்றும் மானியமாக தமிழ்நாட்டிற்கு, 57, 925 கோடி ரூபாய் வழங்கப்பட்டதாக கூறினார். 2014 முதல் 2024 வரை 2 லட்சத்து 55 ஆயிரத்து 875 கோடி ரூபாய் வழங்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார். பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு வரிப்பகிர்வாக, சுமார் 58, 000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
2004 முதல் 2014 வரையிலான காலக்கட்டத்தில் தமிழ்நாட்டிற்கான வரிப்பகிர்வு, 94 ஆயிரத்து 971 கோடியாக இருந்ததாகவும், 2014 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில் 2 லட்சத்து 92 ஆயிரம் கோடியாக இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். இது 207 சதவீதம் அதிகம் என கூறியுள்ளார்.