இந்தியா

மக்களை பாதுகாப்பதில் தமிழக அரசுடன் இணைந்து செயல்படுவோம் - ரவிசங்கர் பிரசாத்

மக்களை பாதுகாப்பதில் தமிழக அரசுடன் இணைந்து செயல்படுவோம் - ரவிசங்கர் பிரசாத்

webteam

எஸ்.சி, எஸ்.டி மக்களை பாதுகாப்பதில் மத்திய அரசும், தமிழக அரசும் ஒன்றாக பயணிப்பதாக மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். 

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் வகையில் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாகக் கூறி, அதனை மறு சீராய்வு செய்யக் கோரி மத்திய அரசும், தமிழக அரசும் மனு தாக்கல் செய்துள்ளன. இதுதொடர்பாக சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லியில் சந்தித்து பேசினர். அப்போது பேசிய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், தமிழக அரசின் இந்த நடவடிக்கையை மத்திய சட்ட அமைச்சராக நான் வரவேற்கிறேன். இதற்காக தமிழக முதலமைச்சருக்கும், துணை சபாநாயகருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்றார். எஸ்.சி, எஸ்.டி மக்களை பாதுகாப்பதில் நாங்கள் அனைவரும் ஒன்றாக இருக்கிறோம் என்று கூறிய அவர் எஸ்.சி, எஸ்.டி மக்களை பாதுகாக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்தார். பின்னர் பேசிய துணை முதல்வர் தமிழக அரசின் நடவடிக்கைக்கு மத்திய அரசு ஆதரவளித்துள்ளதாக ஓ.பன்னீர்செல்வமும் கூறியுள்ளார்.