மத்திய அமைச்சரவையில் ஐக்கிய ஜனதா தளத்திற்கு இடம் கிடைக்கும் என்பது ஊடகங்களின் யூகமாகும் என்று பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.
பீகார் முதல்வர் நிதிஷ் குமார் செய்தியாளர்களின் பேசிய போது, மத்திய அமைச்சரவையில் சேர வேண்டும் என்கிற விருப்பமோ அல்லது எதிர்பார்ப்போ தங்கள் கட்சிக்கு இருந்ததில்லை. ஊடகங்களில் வெளியான இந்த செய்திகள் தவறானது என்று நிரூபணமாகிவிட்டதால், இந்த அத்தியாயத்தை இத்துடன் முடித்துக் கொள்ள வேண்டும். மத்திய அமைச்சரவையில் சேருவது தொடர்பாக தனது கட்சிக்கும் பாஜகவுக்கும் இடையே எந்தப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்று நிதிஷ் குமார் விளக்கமளித்தார்.