இந்தியா

தாஜ்மகால் ஜெய்ப்பூர் அரச குடும்பத்திற்கு சொந்தம்: பாஜக எம்.பி தியா குமாரி பகீர்

Veeramani

தாஜ்மகால் குறித்து பாரதிய ஜனதா கட்சி எம்பி தெரிவித்துள்ள கருத்து புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தாஜ்மகால் அமைந்துள்ள இடம், முன்பு ஜெய்ப்பூர் அரச குடும்பத்துக்கு சொந்தமானதாக இருந்தது என பாஜக எம்.பி.தியா குமாரி தெரிவித்துள்ளார். தாஜ்மகால் வளாகத்தில் உள்ள 20 அறைகளில் இந்து கடவுள்களின் சிலை இருக்க வாய்ப்புள்ளதாகவும், எனவே அந்த அறைகளை திறந்து சோதனை செய்ய அனுமதிக்குமாறு இந்திய தொல்லியல் துறைக்கு உத்தரவிடக்கோரி அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.



இந்நிலையில், தாஜ்மகால் வளாகத்தில் உள்ள அறைகள் ஏன் பூட்டிக் கிடைக்கின்றன என்பதை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என, ராஜஸ்தான் மாநில எம்.பியும், ஜெய்ப்பூர் அரச குடும்ப உறுப்பினருமான தியா குமாரி கூறியுள்ளார். தாஜ்மகால், ஜெய்ப்பூர் அரச குடும்பத்திற்கு சொந்தமானது என்பதற்கான ஆவணம் தங்களிடம் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

தாஜ்மகாலை முகலாய பேரரசர் ஷாஜகான் கைப்பற்றியதாகவும், அப்போது நீதிமன்றம் இல்லாததால், அந்த நேரத்தில் முறையீடு செய்திருக்க முடியாது என்றும் அவர் கூறினார்.