இந்தியா

வட்டாட்சியரை குத்தி கொலை செய்த ஓய்வுப்பெற்ற ஆசிரியர்

webteam

கர்நாடக மாநில எல்லையோர கிராமத்தில் நிலத்தகராறை தீர்க்கச் சென்ற வட்டாட்சியரைக் ஓய்வு பெற்ற ஆசிரியர் குத்திக் கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் பங்காருபேட்டை அருகே தொட்டகலஞ்சி கிராமத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் வெங்கடாசலபதி. இவருக்கும் திப்பேனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த ராமமூர்த்திக்கும் ஒராண்டாக நிலப்பிரச்னை இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் நிலம் சம்பந்தமான பிரச்சனையை தீர்க்க பங்காருபேட்டை வட்டாச்சியர் சந்திரமௌலேஷ்வரா தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள் தொட்டகலஞ்சி கிராமத்திற்கு சென்றுள்ளனர்.

அப்போது வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட நிலத்தை அளவீடு செய்தே போது 2 அடி நிலம் ராமமூர்த்திக்கு கூடுதலாக சென்றுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த வெங்கடாசலபதி வட்டாட்சியர் சந்திரமௌலேஷ்வரா உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, கத்தியை கொண்டு குத்தியுள்ளார். 

இதில் இரத்த வெள்ளத்தில் சரிந்த வட்டாட்சியர் உயிரிழந்தார். இதனைத்தொடர்ந்து வட்டாட்சியரை குத்தி கொலை செய்த வெங்கடாசலபதி பங்காருபேட்டை காவல்நிலையத்தில் சரணடைந்தார். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.