இந்தியா

போலி கல்விச் சான்றிதழ்: டிஎஸ்பி பதவியை இழந்த பெண்கள் டி20 கேப்டன்!

போலி கல்விச் சான்றிதழ்: டிஎஸ்பி பதவியை இழந்த பெண்கள் டி20 கேப்டன்!

webteam

போலி கல்வி சான்றிதழ் காரணமாக, பஞ்சாப் மாநில டிஎஸ்பி பதவியில் இருந்து பெண்கள் டி20 கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் நீக்கப்பட்டுள்ளார்.

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் டி20 கேப்டன், ஹர்மன்பிரீத் கவுர். பஞ்சாபின் மோகாவைச் சேர்ந்த இவர், இங்கிலாந்தில் நடந்த உலகக் கோப்பை, ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 171 ரன்கள் விளாசி இந்திய அணி பைனலுக்கு செல்ல உதவினார். இதை கவுரவிக்கும் விதமாக இவருக்கு டிஎஸ்பி பதவி வழங்குவதாக பஞ்சாப் முதல் அம்ரிந்தர் சிங் தெரிவித்தார். அதன்படி மார்ச் 1-ம் தேதி அவருக்கு டிஎஸ்பியாக பொறுப்பேற்றார். இதற்காக அவர் சமர்ப்பித்திருந்த கல்வி சான்றிதழ்களை சரிபார்க்கும் பணி நடந்தது. அதில் அவர், மீரட்டில் உள்ள சவுத்ரி சரண்சிங் பல்கலைக்கழகத்தில் பட்டம் பயின்றதாக சான்றிதழ் இருந்தது. சரிபார்க்கப்பட்டபோது, அந்த சான்றிதழ்கள் போலியானவை என்பது தெரியவந்தது. 

போலி சான்றிதழ் கொடுத்துள்ளதால் ஹர்மன்பிரீத் பஞ்சாப் டிஎஸ்பியாக தொடர முடியாது என்று முதல்வர் அமரீ்ந்தர் சிங்குக்கு மாநில உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியது. இதையடுத்து அவரது பதவியை மாநில அரசு பறித்துள்ளது. ’ஹர்மன்பிரீத்தின் தற்போதைய கல்வித் தகுதி பிளஸ் டூ வாகத்தான் கருதப்படும். இந்தத் தகுதியை வைத்து அவர் கான்ஸ்டபிளாக வேண்டுமானால் தொடரலாம்’ என்றும் அரசு தெரிவித்துள்ளது. ஆனால் ஹர்மன்பீர்த் பதில் ஏதும் கூறவில்லை.

பஞ்சாப் மாநில அரசு அவர் மீது மோசடி வழக்குப் பதிவு செய்தால், அவர் பெற்ற அர்ஜுனா விருதையும் இழக்க நேரிடலாம். ஆனால், இந்தியா சார்பாக சர்வதேச அளவில் கிரிக்கெட் விளையாடி வருவதால் வழக்குப் பதிவு செய்யவில்லை என்று கூறப்படுகிறது.