இந்தியா

ராஜஸ்தான் முதல்வராக பதவியேற்றார் அசோக் கெலாட்

ராஜஸ்தான் முதல்வராக பதவியேற்றார் அசோக் கெலாட்

webteam

ராஜஸ்தான் மாநில முதலமைச்சராக காங்கிரஸ் தலைவர் அசோக் கெலாட் மற்றும்  துணை முதல்வராக சச்சின் பைலட் ஆகியோர் இன்று பதவி ஏற்றுக்கொண்டார். 

நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் பாஜக ஆட்சி செய்த மாநிலங்களான ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. இதில் ராஜஸ்தான் மாநில முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்ட அசோக் கெலாட்  இன்று பதவி ஏற்றுக்கொண்டார்.

துணை முதல்வராக அம்மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் பதவி ஏற்றுக்கொண்டார். ஜெய்ப்பூர் ஆல்பர்ட் ஹாலில் இவர்களுக்கு ராஜஸ்தான் மாநில கவர்னர் கல்யாண் சிங் பதவி பிரமானம் செய்து வைத்தார். 

இந்த விழாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர்கள் மன்மோகன் சிங், தேவகவுடா, ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, கர்நாடக மாநில முதலமைச்சர் குமாரசாமி, கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் சித்தராமையா, புதுச்சேரி மாநில முதலமைச்சர் நாராயணசாமி, திமுக தலைவர் மு.க ஸ்டாலின், காங்கிரஸ் மூத்த மல்லிகார்ஜுன் கார்கே, முன்னாள் ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே ஆகியோருடன் எதிர்க்கட்சி, கூட்டணியை கட்சியைச் சேர்ந்த தலைவர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியை கொண்டு வந்த பின்புதான் தலையில் தலைப்பாகை கட்டுவேன் என சச்சின் பைலட் ஏற்கெனவே சபதம் எடுத்துருந்தார். அதன்படி சச்சின் பைலட், 5 ஆண்டுகளுக்குப் பின் தலைபாகையுடன் துணை முதல்வராக இன்று பதவி ஏற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.