இந்தியா

கேரள தங்க கடத்தல் விவகாரம் - சிறையிலிருந்து வெளியே வந்தார் ஸ்வப்னா சுரேஷ்

கலிலுல்லா

கேரள தங்கக்கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஸ்வப்னா சுரேஷிற்கு, ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து சிறையிலிருந்து வெளியே வந்தார்.

திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பெயரில் தங்கக்கடத்தலில் ஈடுபட்டதாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஸ்வப்னா சுரேஷ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். சுங்கத்துறை, அமலாக்கத்துறை, தேசிய புலனாய்வு அமைப்பு ஆகியவை வழக்கு பதிவு செய்தன. கேரள அரசியலிலும் இந்த வழக்குகள் தாக்கத்தை ஏற்படுத்தின. ஸ்வப்னா சுரேஷ்-க்கு சுங்கம் மற்றும் அமலாக்கத்துறை தரப்பில் பதிவான வழக்குகளில் ஏற்கனவே ஜாமின் கிடைத்தது.

ஆனால் தேசிய புலனாய்வு அமைப்பு பதிவு செய்த வழக்கில் ஜாமின் கிடைக்காததால், எர்ணாகுளம் - காக்கநாடு மத்திய சிறையிலேயே ஸ்வப்னா சுரேஷ் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், 25 லட்சம் ரூபாய்க்கு ஜாமின் பத்திரம், இதே தொகைக்கு 2 பேரின் உத்தரவாதம் என்ற நிபந்தனைகளுடன், கடந்த 2 ஆம் தேதி கேரள நீதிமன்றம் ஜாமின் அளித்தது. இந்த நடைமுறைகள் நிறைவேற்றப்பட்டததைத் தொடர்ந்து, எர்ணாகுளம் - காக்கநாடு மத்திய சிறையிலிருந்து ஸ்வப்னா சுரேஷ் விடுவிக்கப்பட்டார்.