ஜம்மு காஷ்மீர் முகநூல்
இந்தியா

ஜம்மு காஷ்மீரில் மீண்டும் பதற்றம்?

ஜம்மு-காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில் நேற்றிரவு சந்தேகத்துக்கு இடமான வகையில் பறந்த ட்ரோன்கள் தாக்கி அழிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜெனிட்டா ரோஸ்லின்

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில், இந்தியா தாக்குதலை கடந்த 7 ஆம்தேதி தொடங்கி பயங்கரவாதிகளின் முகாம்களை அழித்தது. இதற்கு பாகிஸ்தான் ராணுவம் பதில் தாக்குதலைத் தொடங்கியதால், அதை இந்தியா தகர்த்தது.

இதனால் இரு நாட்டின் எல்லைப் பகுதிகளிலும் தாக்குதல் நடத்தப்பட்டன. இந்த பயங்கரவாத தாக்குதல் பயங்கரவாதிகள் , பாகிஸ்தான் இராணுவத்தை சேர்ந்த 140 பேர் கொல்லப்பட்டனர். இதனையடுத்து, இரு நாடுகளுக்கிடையே தாக்குதலைத் தடுக்கும் விதத்தில், அமெரிக்க மத்தியஸ்தம் செய்தது. இதையடுத்து, தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு இந்தியாவும், பாகிஸ்தானும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கடந்த 10ஆம் தேதி அறிவித்தார். இதனால், தாக்குதல்களும் நிறுத்தப்பட்டது.

இந்தநிலையில், சம்பா சுற்றுவட்டார பகுதியில் சில ட்ரோன்கள் பறந்ததாகவும், அவை சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் பாதுகாப்பு படை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே சம்பா, கதுவா வட்டாரங்களில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டது. பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசிலும் மின் விநியோகம் தடை செய்யப்பட்டது. இந்நிலையில் எதிரி ட்ரோன்கள் இந்திய எல்லைக்குள் வரவில்லை என்றும், நிலைமை முழு கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் பாதுகாப்பு படை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.