இந்தியா

பாகிஸ்தானியர்களுக்கு நேசக்கரம் நீட்டும் சுஷ்மா

பாகிஸ்தானியர்களுக்கு நேசக்கரம் நீட்டும் சுஷ்மா

webteam

இந்தியாவில் சிகிச்சை பெற்றுக் கொள்ள விரும்பிய, பாகிஸ்தானை சேர்ந்த இரு நோயாளிகளுக்கு மனிதாபிமான அடிப்படையில் விசா வழங்க வெளியுறவு துறை சுஷ்மா சுவராஜ் உத்தரவிட்டுள்ளார்.

பாகிஸ்தானை சேர்ந்த நசீம் அக்தர் மற்றும் ஷமீர் அகமது ஆகியோர் இந்தியாவில் கல்லீரல் அறுவை மாற்று சிகிச்சைக்கு விசா வழங்கும்படி கோரிக்கை வைத்தனர். இந்நிலையில்  இதனை அறிந்த சுஷ்மா உடனடியா  இந்த இருவருக்கும் விசா வழங்கும்படி, இந்திய தூதரக அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளார். மேலும் இதுகுறித்து சுஷ்மா தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா-பாகிஸ்தான் இடையேயான உறவு சுமூகமான நிலையில் இல்லாத  போதிலும், வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், இந்தியாவில் மருத்துவ சிகிச்சை பெற விரும்பும் ஏராளமான பாகிஸ்தானியர்களுக்கு விசா வழங்குதல் உள்ளிட்ட உதவிகளை செய்வதை பலரும் பாராட்டி வருகின்றனர்.