இந்தியா

செவ்வாய்ல சிக்கினாலும்... சுஷ்மா ஸ்வராஜ் ஜாலி டிவிட்

செவ்வாய்ல சிக்கினாலும்... சுஷ்மா ஸ்வராஜ் ஜாலி டிவிட்

Rasus

’செவ்வாய்க்கிரகத்தில் சிக்கி இருந்தாலும் அங்கிருக்கும் இந்திய தூதரகம் மூலம் உங்களை காப்பாற்றுவோம்’ என்று மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் டிவிட்டரில் ஜாலியாகக் கூறினார்.

மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், டிவிட்டரில் ஆக்டிவாக இருப்பவர். வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள், சமூக வலைத்தளங்கள் மூலம் கேட்கிற உதவிகளை, வெளியுறவு துறை மூலம் செய்து பாராட்டுக்களை பெற்றுக்கொள்பவர். அவரிடம், கரண் சைனி என்பவர் டிவிட்டரில், ’நான் செவ்வாய்க்கிரகத்தில் சிக்கிக்கொண்டேன். மங்கல்யாண் மூலம் (987 நாட்களுக்கு முன்) அனுப்பிய உணவு காலியாகிவிட்டது. மங்கள்யான் 2-ஐ எப்போது அனுப்புவீர்கள்?’ என்று கிண்டலாகக் கேட்டிருந்தார்.

இதற்கு அவர் ஸ்டைலிலேயே பதலளித்திருக்கிறார் சுஷ்மா ஸ்வராஜ். அதாவது ‘நீங்கள் செவ்வாய்க் கிரகத்தில் சிக்கியிருந்தாலும், அங்குள்ள இந்திய தூதரகம் உங்களுக்கு உதவும்’ என பதிலடி கொடுத்துள்ளார்.