வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் இரண்டு நாள் பயணமாக இன்று பங்களாதேஷ் செல்கிறார்.
தனது சுற்றுப்பயணத்தின்போது, இருதரப்பு உறவுகளை எவ்வாறு வலுப்படுத்தலாம் என்பது குறித்து அந்நாட்டுத் தலைவர்களுடன் சுஷ்மா ஆலோசிக்க உள்ளார். தலைநகர் டாக்கா சென்றவுடன் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவை சுஷ்மா சந்தித்துத் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய -பங்களாதேஷ் கூட்டு ஆலோசனைக் கவுன்சில் கூட்டத்துக்காக உயர்மட்டக்குழுவையும் சுஷ்மா தன்னுடன் அழைத்துச் செல்கிறார்.