இந்தியா

தாக்குதல் பற்றி விவரிக்க அனைத்துக்கட்சிக் கூட்டம்!

தாக்குதல் பற்றி விவரிக்க அனைத்துக்கட்சிக் கூட்டம்!

webteam

பயங்கரவாதிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட விமானத் தாக்குதல் குறித்து விளக்கம் அளிக்க, அனைத்துக் கட்சிக் கூட்டத்தை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இன்று மாலை கூட்டியுள்ளார். 

புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவம் இன்று காலை அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டது. பாகிஸ்தான் எல்லையையொட்டிய பயங்கரவாதிகள் முகாம்கள் மீது இந்திய ராணுவம் 1000 கிலோ அளவிலான குண்டுகளை பொழிந்தது. ஜெய்ஷ் இ முகமது, லஷ்கர் இ தொய்பா, ஹிஜ்புல் முஜாகிதீன் ஆகிய பயங்கரவாதிகள் முகாமை குறிவைத்து இந்தியா தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதில் பல பயங்கரவாதிகளும் பயங்கரவாத தலைவர்களும் கொல்லப்பட்டதாக இந்திய வெளியுறவுத் துறைச் செயலர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இந்த விமானத் தாக்குதல் குறித்து பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு ஆகியோரிடம் விளக்கம் அளித்தார்.

இதற்கிடையே, இந்த விமானத் தாக்குதல் குறித்து விளக்கம் அளிக்க, அனைத்துக் கட்சிக்கு கூட்டத்துக்கு வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அழைப்பு விடுத்துள்ளார். இந்தக் கூட்டம் இன்று மாலை நடக்கிறது.