எச்-1பி விசாவுக்கு அமெரிக்கா கொண்டு வந்துள்ள புதிய கட்டுப்பாடுகள் குறித்து தொழில்நுட்பத் துறையில் பணிபுரிவோர் கவலைப்படத் தேவையில்லை என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் உள்ள ஐடி நிறுவனங்களில் பணிபுரிய வழங்கப்படும் எச்-1பி விசாவுக்கு அதிபர் டிரம்ப் தலைமையிலான அரசு, கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அமெரிக்க ஐடி நிறுவனங்களில் அதிகளவில் இந்தியர்கள் பணிபுரிந்து வருவதால், இந்த அறிவிப்பு இந்தியர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், எச்1-பி விசாவுக்கான கட்டுப்பாடுகள் குறித்து கவலைப்பட தேவையில்லை என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர், சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் புதிய கட்டுப்பாடுகள் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. எனவே, இந்தியாவைச் சேர்ந்த பணியாளர்கள் யாரும் கவலைப்படத் தேவையில்லை. அமெரிக்காவில் இருக்கும் இந்தியர்கள் யாரும் வேலை இழக்கவில்லை. இந்த விசா விவகாரம் குறித்து அமெரிக்காவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது என சுஷ்மா சுவராஜ் மக்களவையில் தெரிவித்தார்.